"பேண்ட் ஜிப்பை கழட்டுறான் அந்த ஆளு"- ரயிலில் பட்டிமன்ற பேச்சாளருக்கு நேர்ந்த கொடூரம் Indian Railways
113 Views
Added
"பேண்ட் ஜிப்பை கழட்டுறான் அந்த ஆளு" - ரயிலில் பட்டிமன்ற பேச்சாளருக்கு நேர்ந்த கொடூரம் | Indian Railwaysரயிலில் சென்ற பெண்ணிடம்,மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசாமி;ஓடிய ரயிலை சங்கிலியால் இழுத்து நிறுத்தி, கயவனை போலீசாரிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ:
பெங்களூர் விரைவு ரயிலானது, தினமும் அதிகாலை 4.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு பெங்களூர் செல்கிறது. இந்த ரயிலில் முன்பதிவு இல்லாததால், பதிவு செய்யாத பயணிகள் அதிகம் பயணம் செய்து வருகின்றனர். இன்று காலை காரைக்காலைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளரான யோகதர்ஷினி என்பவர் தனது பட்டிமன்ற பணிக்காக ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடலூரில் ரயில் ஏறி மர்ம நபர் ஒருவர் இந்த பெண்ணின் இருக்கைக்கு எதிரே அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்நபர் கால்சட்டை ஜிப்பை கழட்டி யோகதர்ஷினியை பார்த்து, தவறான முறையில் செய்கைகளை காண்பித்துள்ளார். இதனால் அச்சமடைந்த பட்டிமன்ற பேச்சாளரான யோக தர்ஷினி, உதவிக்காக அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் சுவாமிநாதனிடம் உதவி கோரினார். நடந்தவற்றை கேட்டறிந்த அவர், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கயவனை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் குடிபோதையில் இருந்த அந்நபர் பெயர் செல்வராஜ் என்பது தெரியவந்ததை தொடர்ந்து, உதவி ஆய்வாளரின் உதவியுடன், அவசர சங்கிலியை இழுத்து நெய்வேலி ரயில்வே நிலையத்தில் அந்நபரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவங்களை யோக தர்ஷினி தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரயிலில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#IndianRailways #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
- Category
- News
- Tags
- tamil news live, news 18 tamilnadu tv live, news18 tamil live
Comments